Sunday, October 18, 2015

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி


அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதுபோன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.



இந்த நிலையைமாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் உச்சரிப்பு பயிற்சி போன்றவை, பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக தரப்படுகின்றன. அடுத்த கட்டமாக, பெங்களூரில் உள்ள தென்னிந்திய ஆங்கில பயிற்சி மண்டல மையத்தில், ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நவ., 2 முதல் டிச., 1 வரை, ஒரு மாதம் பயிற்சி தரப்படுகிறது. 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் இருந்து, தமிழகம் முழுவதும், 150 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

அன்பார்ந்த கல்விச் செய்தி நண்பர்களே! நீங்கள் இடும் கருத்துகள் நாகரீகமாகவும், மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வகையிலும் இருக்கட்டும். எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் நாம் ஒரு முன்னதாரணமாக இருப்பது நம்முடைய கடமை அல்லவா?

அன்புடன்,
கல்விச் செய்தி குழு.

உங்கள் படைப்புகளை அனுப்ப

அன்புள்ள நண்பர்களே! உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள் (G.O), கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள் (FORMS), Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : kalviseithipadasalai@gmail.com தங்கள் வருகைக்கு மிக்க நன்றி